ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 5 ஜனவரி 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஃபேஸ்புக்கை 'சரிசெய்வேன்': மார்க் சக்கர்பர்க் சபதம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஃபேஸ்புக்கை "சரிசெய்ய வேண்டும்" என்பது 2018 ஆம் ஆண்டின் தனக்கான தனிப்பட்ட சவால் என்று அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் கூறியுள்ளார்.

கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள பிழைகள், அதன் கருவிகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில பிரச்சனைகளை சரிசெய்வேன் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் குறித்த புத்தகம் முன்கூட்டியே வெளியிடப்படும்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செய்திகளை கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தடை விதிக்க முயற்சித்ததையடுத்து, முன்கூட்டியே அப்புத்தகத்தை வெளியிட உள்ளதாக அதன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

`Fire and Fury: Inside the Trump White House` என்ற புத்தகம் வெள்ளிக்கிழமையன்றே வெளியாகும் என்று அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்கா

படத்தின் காப்புரிமை EPA

தன் நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகளை சமாளிக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாகக் கூறி, அந்நாட்டுக்கு வழங்கப்படும் ஏறக்குறைய அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

"பாம் புயல்"- 4000 விமானங்கள் ரத்து

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள "பாம் புயலால்" கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, 17 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமையன்று புறப்பட இருந்த சுமார் 4000 விமானங்கள் புயலால் ரத்து செய்யப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :