டிரம்ப் புத்தக சர்ச்சை: டிரம்பின் மகன் "தேசபக்தர்" என மாற்றிப் பேசும் பேனன்

  • 8 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை Reuters

டிரம்பின் மகனை "தேசதுரோகம்" செய்தவர் எனக் குறிப்பிட்ட அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பேனன், தற்போது அக்கருத்தை மாற்ற முயற்சித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் மைக்கெல் வோல்ஃப் எழுதிய "Fire and Fury: Inside the Trump White House" என்ற புதிய புத்தகத்தில் டிரம்ப் மகனை "தேசதுரோகி" மற்றும் "நாட்டுப்பற்று இல்லாதவர்" என பேனன் கூறியதாக பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

2016ல் ஜூன் மாதம், டிரம்ப் மகனும் ரஷ்ய குழு ஒன்றும் சந்தித்ததை பேனன் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய பேனன், தாம் கூறிய கருத்துகள் அந்த சந்திப்பில் இருந்த முன்னாள் உதவியாளர் பால் மனஃபோர்ட் குறித்துதான் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றி செனெட், பிரதிநிதிகள் சபை மற்றும் சிறப்பு ஆலோசகர் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை க்ரெம்லின் மற்றும் டிரம்ப் மறுத்துள்ளனர்.

வருத்தம் தெரிவித்த பேனன்

டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் "நல்ல மனிதர்" என்றும், "தேசபக்தர்" என்றும் பேனன் கூறியதாக ஆக்சியோஸ் என்ற செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், "ரஷ்யர்களின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பிரச்சார நிபுணரான பால் மனஃபோர்ட்டைத்தான் தம் கருத்துகள் குறிவைத்ததாக" அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அவர்கள் நம் நண்பர்கள் அல்ல, தந்திரம் வாய்ந்தவர்கள் என தெரிந்திருக்க வேண்டும். தன் கருத்துகள் டிரம்பின் மகனை குறிக்கவில்லை" என்றும் பேனன் கூறினார்.

மைக்கெல் வோல்ஃப் அவர் புத்தகத்தில் எழுதியுள்ளது "தவறானது" என்று குறிப்பிட்டுள்ள பேனன், இதனைக்கூற ஐந்து நாட்களாக காத்திருந்தது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :