ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 3 கோடி ரூபாயை கடத்திய பணிப்பெண் கைது

  • 10 ஜனவரி 2018
விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது படத்தின் காப்புரிமை DRI

சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவரும், அவருக்கு துணையாக இருந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் பணியில் இருந்த அப்பெண், தனது பையில் அப்பணத்துடன் பிடிபட்டதாக பிபிசியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிற விமானப் பணியாளர்களுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்

தங்கள் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி படுத்தியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தங்கள் பணியாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் (4.8 லட்சம் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள அப்பணம், பெரும்பாலும் 100 டாலர் தாள்களாக இருந்ததாக வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரி ஒருவர் பிபிசியின் டெவினா குப்தாவிடம் தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கு உதவி செய்து வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளில் தங்கம் வாங்குவதற்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் சட்டவிரோதமாக அந்தத் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்