'ரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை': டிரம்ப்

  • 11 ஜனவரி 2018

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிபர் தேர்தலில் உள்கூட்டு எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், "என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

"நான் 100% விசாரிக்கப்படுவேன்," என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் உறுதியாக கூறியிருந்தார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோல்வி அடையச் செய்வதற்காக தனது பிரசாரக் குழுவினர் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த டிரம்ப், அவற்றை 'பழிவாங்கும் நடவடிக்கை' என்று கூறியிருந்தார்.

முன்னதாக, டிரம்ப்-ஐ விசாரணை செய்வதற்கான தேதியை நிர்ணயிப்பதற்காக டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் மூலர் உடன் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "எவ்விதமனான உள்கூட்டு எதுவும் இல்லாதபோது, எந்த நிலையிலும் உள்கூட்டு இருப்பதை யாரும் கண்டறியாதபோது, நேரடியாக விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க தேசிய கீதத்தை மறந்தாரா அதிபர் டிரம்ப்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :