பாகிஸ்தான் சிறுமி பலியான கசூர் மாவட்டத்தில் டஜன் கணக்கில் சிறார்கள் பலி

பாகிஸ்தான் சிறுமி பலியான கசூர் மாவட்டத்தில் டஜன் கணக்கில் சிறார்கள் பலி

பாகிஸ்தானில் பாலியல் வல்லுறவுக்குப் பிறகு 6 வயது சிறுமியை கொன்ற நபர் பற்றி துப்பு கொடுத்தால் 90,000 டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் பலியான சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அங்கு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற கசூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சிறார்கள் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.