ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 13 ஜனவரி 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சௌதி: பெண்களுக்கு புதிய அனுமதி

பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள தீவிர இஸ்லாமியவாத நாடான சௌதி அரேபியா பாலியல் பிரிவினைகளை குறைக்கும் முயற்சிகளில் ஒரு படியாக, கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு பெண்கள் இனி பார்வையாளர்களாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அவர்கள் குடும்பத்துடன் பார்வையாளர்கள் நுழையும் வாயில் வழியே இனி உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

'டிரம்ப் மன்னிப்பு வேண்டும்'

அமெரிக்காவில் குடியேறியுள்ள சில வெளிநாட்டவர்களை விமர்சித்தபோது ஆஃப்பிரிக்க நாடுகளை 'மலத்துளை' நாடுகள் எனும் அநாகரிகமான சொல்லைப் பயன்படுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆஃப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

எனினும் அந்த சொல்லை பயன்படுத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிலி: தேவாலயங்கள் மீது தாக்குதல்

அடுத்த வாரம் போப் பிரான்சிஸ் சிலி நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டும் சூறையாடப்பட்டும் வருகிறது.

படத்தின் காப்புரிமை EPA

தலைநகர் சான்டியாகோவில் மட்டும் மூன்று தேவாலயங்கள் மீது சிறு அளவிலான குண்டு வீசப்பட்டுள்ளது.

இரான் அணுசக்தி ஒப்பந்தம் நீட்டிப்பு

இரான் மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்டிருந்த தடைகளுக்கு அளித்த விலக்கை மேலும் 120 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன்மூலம் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :