உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்

மன்சா மூசா

உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆஃபிரிக்கா நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா உலக வரலாற்றிலே பணக்கார மனிதராகக் கருதப்படுகிறார். 1280 முதல் 1337 ஆண்டு வரை மாலியை மூசா ஆண்ட போது, தங்கம் உள்ளிட்ட நிறைய கனிம வளங்கள் அங்கு கிடைத்தன.

உலகம் முழுவதும் தங்கத்திற்கான தேவை உச்சத்தில் இருந்த சமயத்தில் அவர் வளமிக்க அந்நாட்டை ஆண்டார். இவரது இயற்பெயர் மூசா கெய்ட்டா. இவருக்கும் முடிசூட்டப்பட்ட பிறகு மன்சா என்று அழைக்கப்பட்டார். மான்சா என்றால் மன்னர்.

தற்போதைய செனகல், காம்பியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர், நைஜீரியா ஆகியவை இவரது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளாகும். இவர் கட்டிய பல மசூதிகள் இன்னும் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மன்சா மூசா கட்டிய மசூதி

மன்சா மூசாவுக்கு எவ்வளவு சொத்து இருந்தது?

தற்போதைய காலத்தில் மன்சா மூசாவின் சொத்து மதிப்பைக் கணக்கிடுவது கடினமான ஒன்று. ஆனாலும் அவருக்கு 400,000 மில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் ரூபாயாகும்.

உலக பணக்காரராக உயர்ந்துள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பு, 1,06,000 மில்லியன் டாலர்களாக உள்ளது.

இதில் பணவீக்கம் சேர்க்கப்படவில்லை என்றால், உயிருடன் இருக்கும் பணக்காரர்களில் ஜெஃப் பெஸோஸ் சொத்து மதிப்பு அதிகபட்சமாக இருக்கும்.

இருந்தாலும் இந்த தகவல்கள் குறித்து கேள்வி எழுப்புபவர்களும் உள்ளனர்.

மெக்கா பயணம்:

இஸ்லாமியர்களின் புனித நகராகக் கருதப்படும் மெக்காவுக்கு மன்சா மூசா இவர் பயணம் செய்தது குறித்தும் சுவாரசியமான கதை உள்ளது.

மூசாவுடன் 60 ஆயிரம் பேர் மெக்காவுக்குப் பயணம் செய்தனர்.

அத்துடன் 80 ஒட்டகத்தில் 136 கிலோ தங்கத்தையும் அவர்கள் கொண்டு சென்றனர். மூசா மிகவும் தாராள மனதுடையவர் என கூறப்படுகிறது. எகிப்து தலைநகரான கொய்ரோவை அவர்கள் கடக்கும் போது, அங்கிருக்கும் ஏழை மக்களுக்குத் தங்கத்தை தானமாக வழங்கினார் மூசா.

மாலியிலும் ஆஃபிரிக்காவிலும் பல பள்ளிகளையும், நூலகங்களையும் தன் ஆட்சி காலத்தில் மூசா கட்டினார்.

25 அண்டுகள் மன்னராக இருந்த மூசா 1337ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :