அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்

டொனால்ட் டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார்.

டிரம்ப்பின் அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடு பற்றி எந்த கவலையும் இல்லை என்று மருத்துவர் ரோனி ஜாக்சன் கூறி உள்ளார்.

கடந்த வாரம் டிரம்ப்பிற்கு மூன்று மணி நேர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு செய்யப்பட்ட முதல் மருத்துவ பரிசோதனை இதுவாகும்.

சில தினங்களுக்கு முன் டிரம்ப் குறித்து ஒரு புத்தகம் வெளியானது, அந்த புத்தகம் டிரம்பின் மனநிலை குறித்து ஒரு சர்ச்சையை உண்டாக்கியது. இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பத்திரிகையாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய மருத்துவர் ஜாக்சன், ஒட்டுமொத்தமாக டிரம்பின் உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது என்றார்.

"பரிசோதனையின் அனைத்து தரவுகளும் அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதையே சுட்டிக் காட்டுகிறது. அவர் பதவிகாலம் முழுவதும் இதே ஆரோக்கியத்துடன் இருப்பார்." என்று விவரித்தார்.

கடந்த வாரம் ராணுவ மருத்துவர்கள் டிரம்ப்பை பரிசோதித்தனர். அவர்களும் டிரம்ப் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவே கூறினார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்ப் குறித்து எழுதப்பட்ட `ஃபயர் அண்ர் ஃப்யூரி' புத்தகத்தில், அதன் ஆசிரியர் மைக்கேல், டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் ஒரு குழந்தையைப் போல் பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்