ஆப்பிள் நிறுவனம் செலுத்த போகும் அசர வைக்கும் வரி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஆப்பிள் நிறுவனம்... அசர வைக்கும் வரி

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க வரி சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாறுதல்களை அடுத்து ஆப்பிள் நிறுவனம் ஏறத்தாழ 38 பில்லியன் டாலர் வரியை அமெரிக்காவுக்கு செலுத்த இருக்கிறது. வெளிநாட்டில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களை உள்நாட்டில் முதலீடு செய்ய வைக்க வரி விதிப்பில் சில மாறுதல்களை அமெரிக்கா கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆப்பிள் இவ்வளவு அதிகமான வரியை செலுத்த நேரிட்டுள்ளது. அந்த நிறுவனம் அமெரிக்காவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக புதிதாக 20,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி உள்ளது.

அமெரிக்கர்கள் கடத்தல்

படத்தின் காப்புரிமை Reuters

இரண்டு அமெரிக்கர்களும், கனடா நாட்டை சேர்ந்த இருவரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரியா போலீஸ் தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு போலீஸாரும் கொல்லப்பட்டுள்ளனர். கடுனா பகுதியிலிருந்து நைஜீரியா தலைநகர் அபுஜா செல்லும் வழியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

கொலை... உதவிய செல்ஃபி

படத்தின் காப்புரிமை Facebook

ஒரு கொலையை கண்டுபிடிக்க போலீஸுக்கு ஒரு செல்ஃபி புகைப்படம் உதவி இருக்கிறது. கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிட்னி என்ற பெண் கொலை செய்யப்பட்டாள். அவரது உடல் சாஸ்கடோன் என்ற பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலையை விசாரித்த போலீஸுக்கு, யார் கொலையாளி என்பது துப்பு துலங்காமல் இருந்தது. இப்படியான சூழ்நிலையில், பிரிட்னியின் தோழி சைனி ரோஸ் பகிர்ந்த ஒரு செல்ஃபி புகைப்படம், ரோஸ்தான் கொலையாளி என உறுதி செய்ய போலீஸூக்கு உதவி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ரோஸ் ஒரு பெல்ட் அணிந்திருந்தார். அந்த பெல்ட்டைக் கொண்டுதான் பிரிட்னி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

ஏமாற்றிய ஹீலர்

படத்தின் காப்புரிமை Alhassan Sillah

பல பெண்களை ஏமாற்றிய ஹீலரை கினி போலீஸ் கைது செய்துள்ளது. நா ஃபாண்டா காமாரா என்ற அந்த ஹீலர், வயிறை வீங்க வைக்க கூடிய இலை, மற்றும் மூலிகைகளை கொடுத்து, பெண்களின் வயிறை வீங்க வைத்து, அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக நம்பவைத்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்