கஜகஸ்தான் பேருந்தில் `தீ` விபத்து: 52 பேர் பலி

கஜகஸ்தான் பேருந்தில் `தீ` விபத்து: 52 பேர் பலி
Image caption கஜகஸ்தான் பேருந்தில் `தீ` விபத்து: 52 பேர் பலி

வட மேற்கு கஜகஸ்தானில் பேருந்து ஒன்றில் தீ பிடித்ததில் 52 பேர் இறந்துள்ளதாக, கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் மட்டும், இந்த விபத்தில் உயிர் பிழைத்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து கஜகஸ்தான் உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு அக்டோப் பகுதியில் உள்ள இர்கிஸ் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

உஸ்பக் குடிமக்களை ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யாவிற்கு ஏற்றி சென்ற பேருந்தாக அது இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்