பறக்கும் விமானத்தில் போப்பாண்டவர் நடத்திய திருமணம்

  • 18 ஜனவரி 2018

சிலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் விமானத்தில் வைத்து ஒரு திருமணம் செய்து வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

விமான ஊழியர் ஜோடி ஒன்று 2010ம் ஆண்டில் சிவில் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளது.

உள்ளூர் தேவாலயம் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால், மதமுறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளனர்.

சான்டியாகோவில் இருந்து வட பகுதியில் இருக்கும் இகீகே நகருக்கு விமானப் பயணம் மேற்கொள்கையில், போப் பிரான்சிஸ் குறுகிய மத சடங்கை நிறைவேற்றி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சாட்சியாக இருந்தார்.

விமானத்தில் பயணம் மேற்கொண்ட மதகுருமார்கள் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

விமானத்தில் வைத்து போப் ஒருவர் நடத்தி வைத்த முதல் திருமணம் இதுவாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :