அமெரிக்கா: அரசு பணிகள் நிறுத்தத்தால் விசா, பாஸ்போர்ட் பணிகள் முடக்கம்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க செனட் சபை மறுத்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அரசுப் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகள் தவிர பிற துறைகள் எதுவும் இயங்காது. சுமார் 50% அரசு துறைகள் இயங்காது என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப்பின் குடியரசு கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களும் புதிய வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் என்ன பாதிப்புகள் உண்டாகும்?

அமெரிக்கா வரும் வெளிநாட்டினருக்கான விசா மற்றும் கடவுச்சீட்டு நடைமுறைகள் இதனால் தாமதமாகும்.

அமெரிக்காவின் பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகப் பணிகளைத் தொடர முடியாது. எனினும் அவசர கால மற்றும் பாதுகாப்பு சேவைகள் தொடரும்.

தேசியப் பூங்காக்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மூடப்படும். அங்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாது. செனட் வாக்கெடுப்புக்கு முன்பு வரை, பட்ஜெட் ஒப்புதல் தோல்வியடைந்தால், அவற்றை இயங்கச் செய்வதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்