ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

குர்திஷ் ராணுவ குழுவுக்கான ஆதரவை நிறுத்துக

படத்தின் காப்புரிமை Getty Images

ஒய்ஜிபி என்று அறியப்படும் சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவுக்கு அளித்துவரும் ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து குர்திஷ் ராணுவ குழுவுக்கு எதிராக தற்போது துருக்கி சண்டையிட்டுவருகிறது.

ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகிகள் ராஜிநாமா

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகக் குழுவில் இருந்து மூன்று நிர்வாகிகள் ராஜிநாமா செய்துள்ளனர். அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சிமோன் பைல்ஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஏமனில் தொடரும் மோதல்: 20 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images

ஏமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மதுபான விடுதியில் ஏழு பேர் கொலை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கொலம்பியாவில் ஒரு மதுபான விடுதியில் ஏழு பேர் கொல்லப்பட்டது குறித்து கொலம்பியா பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. இடதுசாரி கிளர்ச்சி குழுவுக்கும், போதை மருந்து கும்பலுக்கும் அப்பகுதியில் சண்டை ஏற்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :