பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி?

தொழிலை தேடி தெருக்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால் இணையம் தங்களுடைய தொழில்துறையை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக பிரிட்டன் விலைமாதர்களும், பாலியல் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இணைய வழி பாலியல் தொழில் பற்றிய மிக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

"பியாண்ட் த கேஸ்" (Beyond the Gaze) என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு, புதிய தொழில்நுட்பங்களால் அதிக பாலியல் தொந்தரவு, மறைமுகமாக பின்தொடர்தல், பாலியல் தொழிலில் இருப்பதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிய வருதல் போன்ற புதிய ஆபத்துகளை உருவாக்கியிருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டன் பாலியல் தொழில் சந்தையை அடிப்படையாக கொண்டதாகும்.

2 ஆண்டுகளாக பணிச் சூழ்நிலை, பாதுகாப்பு, காவல்துறை ரோந்து ஆகியவற்றை ஆராய்ந்து லெய்செஸ்டர் மற்றும் ஸ்ட்ராத்ஸ்கிடி பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த முடிவுகளுக்கு வந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image: Getty

இந்த ஆய்வுக்காக 640 பாலியல் தொழிலாளர்களிடமும், 1500 வாடிக்கையாளர்களிடமும் ஆய்வாளர்கள் பேசியுள்ளனர்.

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் இந்த தொழில் முற்றிலும் உருமாறியிருக்கிறது என்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையம் இல்லாவிட்டால், தாங்கள் இதனை செய்யமாட்டோம் என்று 60 சதவீத பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெகிழ்வுத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரம்

தன்னுடைய குடும்ப வாழ்க்கையோடு பாலியல் தொழிலை இணையம் வழியாக நடத்துவது எளிதாகிறது என்று பாலியல் தொழிலாளரும், செயற்பாட்டாளருமான சார்லோட் ரோஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"இந்த தொழிலில் தான் விரும்புவது அதிலுள்ள நெகிழ்வுத்தன்மையைதான். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களோடு நேரம் செலவிடுவதோடு, வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது உண்மையிலே மிகவும் முக்கியம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"தன்னுடைய சொந்த வியாபாரத்தை கொண்ட சுதந்திரமான, சுய தொழில் செய்யும் நபர்தான் ஒரு பாலியல் தொழிலாளி" என்று கூறுகிற ரோஸ், தங்களுடைய பிராண்ட் பற்றி பிறரை அறிய செய்யவும், புதிய வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்ளவும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் இணையம் உதவுகிறது" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் தொழிலாளியாக இருப்பதால் கிடைக்கின்ற சமூக முத்திரை போன்ற தீமைகளும் இதிலுள்ளன என்று ரோஸ் தெரிவிக்கிறார்.

ரோஸ் பாலியல் தொழிலாளியாக இருப்பதால் கடந்த காலத்தில், அவருடைய குழந்தைகளுக்கு சிரமமாக இருந்துள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்களோடு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.

"வாழ்வதற்காக நான் என்ன செய்கிறேனோ அது தொடர்பாக பிறர் கூறும் அறநெறி கருத்துக்காக நான் அச்சுறுத்தப்பட்டேன், மிரட்டப்பட்டேன். நான் இரண்டு முறை வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டேன்" என்கிறார் ரோஸ்.

இணையம் வழியாக பாலியல் தொழில் சேவைகளை விளம்பரப்படுத்துவது பிரிட்டனிலுள்ள சட்டத்திற்கு எதிரானதல்ல. 60 முதல் 80 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அவர்கள் செய்கின்ற தொழில் பொதுவாக பாலியல் தொழில் என்று பார்க்கப்படுவதும், அவர்களது தொழிலும் சிறிதளவே தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

வெர்னைய்ரி என்பவர் 'ஸ்ட்ரிக்ட்லி மாடல்ஸ்' நிறுவனத்தின் மேலாளராகும். இந்த நிறுவனம் வயது வந்தோருக்கான வெப்கேம் வலையமைப்புகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

"பெரும்பாலான நேரங்களில் மாடல் அழகிகள் தங்களுடைய ஆடைகளை உண்மையிலேயே அகற்றிவிடுவதில்லை. தங்களுடன் பேசுவதற்கு யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடும் தனிமையில் வாடும் மக்கள் பலரை அங்கு நீங்கள் காணலாம்" என்று அவர் தெரிவிக்கிறார்.

தெருக்களில் குறைந்த விபச்சாரம்

படத்தின் காப்புரிமை Getty Images

அதிக அளவிலான "நடமாடும் மற்றும் பலதரப்பட்ட" பாலியல் தொழில் வடிவங்களை புதிய தொழில்நுட்பங்கள் வழங்கியுள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தனக்குரிய பாதுகாப்பான இணைய கேமரா மூலம் ஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்களை பெறுவது சாத்தியமாகியுள்ளது.

இந்த வசதி பாலியல் தொழிலில் பலதரப்பட்ட தெரிவுகளை இந்த தொழிலை செய்து வருவோருக்கு வழங்கியுள்ளது. இத்தகைய புதிய வசதி இல்லாவிட்டால் அவர்களில் பலர் இந்த தொழிலை செய்ய தொடங்கியிருக்க மாட்டார்கள்.

கேமராவுக்கு முன்னால் நடத்தப்படுகின்ற நிகழ்வுகளுக்காக வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துவது முதல், பாதுகாப்பு சேவைகள் வரையான பல சேவைகளில் வழங்கப்படுகின்றன.

பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் இணையம் மூலம் தொழில் நடத்த தொடங்கியுள்ளதோடு, தெருவில் நடக்கும் பாலியல் தொழில் பாலியல் சந்தையில் வெறும் 3 சதவீதமே நடைபெறுவதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

புதிய ஆபத்துக்கள்

பாலியல் தொழில்துறையை இணையம் பாதுகாப்பானதாக ஆக்கியிருக்கலாம். ஆனால், அதே இணையத்தால் பிற ஆபத்துக்கள் தோன்றியுள்ளன என்று இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையிலான குற்றத்தை தாங்கள் அனுபவித்திருப்பதாக 80 சதவீதத்திற்கு அதிகமான பாலியல் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த ஆய்வில் பங்கெடுத்தோரில் மூன்றில் இரண்டு பங்கினர் கூறியுள்ளனர்.

தங்களுடைய அந்தரங்கம் மீறப்பட்டுள்ளதால் அச்சமடைவதாகவும், தாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என்று குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தெரிய வந்துள்ளதால் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் ஏறக்குறைய பாதி பேர் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிலில் 24 ஆண்டுகள் வேலை செய்துள்ள பாலியல் தொழிலாளி லௌரா லீ, "இணையம் ஓரளவுக்கு நம்மை பாதுகாக்கலாம்" என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இணையம் மூலமாக நடைபெறும் பாலியல் தொழில் வன்முறை குற்றச்செயல் சம்பவங்களை குறைத்திருக்கும் நிலையில், பாலியல் கொடுமை மற்றும் சம்மதம் இல்லாமலேயே பாலியல் தொழிலாளர்களின் தகவல்களை மக்கள் பயன்படுத்துவது போன்ற இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் உயரிய குற்றங்கள் நடைபெறுவதாக இந்த பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களுக்கு 'அதிர்ச்சி வைத்தியம்'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு, `அதிர்ச்சி வைத்தியம்`

"தொடர் மின்னஞ்சல்கள், இடைவிடாத தொலைபேசி அழைப்புக்கள், வீடுகளுக்கே வாடிக்கையாளர்கள் செல்வது போன்ற சில தொந்தரவுகள் 6, 7, 8 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் டெல்லா சான்டர்ஸ் வழங்கிய அறிக்கை குறிப்பிடுகிறது.

"பாலியல் தொழிலாளர்கள் இந்த குற்றங்களை காவல்துறையினரிடம் தெரிவிக்க மனமின்றி இருப்பது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகும் வாய்ப்பு அல்லது பழிவாங்கப்படும் வாய்ப்பை நினைத்து அவர்கள் அச்சமடைகின்றனர்" என்று பேராசிரியர் சான்டர்ஸ் தெரிவிக்கிறார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை முரண்பட்டதாக இருந்து வந்துள்ளது.

அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கை அடிக்கடி முதிர்ச்சியான ஒன்றாக இல்லாமலும், கடத்தல் மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதோடு, அவர்களின் அதிகாரத்தை காட்டுவதாக இருக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :