செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

த இந்து (தமிழ்)

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நாமக்கல்லில் பேசியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "தேவைப்பட்டால் நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்" என ஆவேசமாக பேசியுள்ளாதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அப்படி செய்யக்கூடாது. நாம் அறவழியில் போராட வேண்டும்" என்று பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை ETIENNE LAURENT/AFP/Getty Images

டைம்ஸ் ஆப் இந்தியா

தன்னுடைய வாழ்வில் வாழ்வின் உண்மையான ஹீரோக்களில் ஒருவராக போலியோவுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர் மத்தேயு வர்க்கீஸை கருதுவதாக என்ற மைக்கிரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

போலியோவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பிரிவை இந்தியாவில் இந்த மருத்துவர் மட்டுமே நடத்துவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அண்ணாசாலைக்கு அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் குழி விழுந்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உடைமைகள் சேதமடையவில்லை என்றும் தெரிவித்திருக்கும் இந்த செய்தித்தாள், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images

தினமணி

இந்தியாவின் 69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்பு ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்ததாக இந்த செய்தித்தாள் தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடி ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொண்டனர் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அதிக யூனிட் மின் உற்பத்தி

தமிழ் நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் 22, 800 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதாக அதன் இயக்குநர் பி.எஸ்.சௌத்திரி குடியரசு தினவிழாவில் கூறியிருப்பதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்