விண்ணில் செலுத்தப்பட்ட கார்: சாதித்த 'ஸ்பேஸ் எக்ஸ்' (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எலான் மஸ்க் மஸ்க்குக்கு சொந்த மான சிவப்பு வண்ண காரே ராக்கெட்டில் பறந்து சென்றது.

'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

இந்த 'ஃபால்கோன் ஹெவி' ராக்கெட்டில் ஒரு டெஸ்லா கார் வைக்கப்பட்டது. இதுவே விண்வெளிக்கு செல்லும் முதல் காராகும்.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த, தொழில்முனைவர் எலான் மஸ்க்குக்கு சொந்தமானதாகும். எலான் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு வண்ண காரே ராக்கெட்டில் பறந்து சென்றது.

படத்தின் காப்புரிமை SPACEX

70 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டால், 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்த முடியும்.

இந்த எடை, ஐந்து இரட்டை அடுக்கு பேருந்துகளின் எடைக்கு சமமானதாகும்.

எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செல்லும் திட்டத்திற்கு, இந்த ஃபால்கோன் ஹெவி' ராக்கெட்டை பயன்படுத்த எலான் மஸ்க் விரும்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :