தென் கொரிய ஒலிம்பிக்கிற்கு முன்னதாக வட கொரிய ராணுவ அணிவகுப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருநாள் முன்னதாக தனது ராணுவத்தின் 70ஆவது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது வட கொரியா.

ராணுவ படைகள் உருவாக்கப்பட்ட தினத்தை அனுசரிக்கும் விதமாக பியாங்யாங்கில் 40 வருடங்களாக ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வருடம், பிப்ரவரி 8ஆம் தேதிக்கு அணிவகுப்பு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி தங்களது திட்டங்களை பற்றிய விமர்சனங்களை வட கொரியா நிராகரித்துள்ளது.

"உலகில் உள்ள எந்த ஒரு நாடும் தனது ராணுவம் உருவாக்கப்பட்ட தினத்தை முக்கியமானதாக கருதி, ஆடம்பர நிகழ்ச்சிகள் மூலம் அந்நாளை கொண்டாடும். அது ஒரு வழக்கமான பாரம்பரியம் மற்றும் அடிப்படை அறிவு" என ஆளும் கட்சியின் செய்தித்தாளான நோடான் ஷின்முன் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்த, அணிவகுப்பு நடக்காமல் இருப்பதே சிறப்பு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வட கொரியா தனது தொலைதூர ஏவுகணைகளை அணிவகுப்பில் காட்சிப்படுத்தும் என நம்புவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

13,000 படைகளும், 200 உபகரணங்களும் பியாங்யாங் விமான நிலையத்தில் ஒத்திகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரிய மக்கள் ராணுவம் பிப்ரவரி 28ஆம் தேதி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வருடம் அதன் 70ஆவது ஆண்டுவிழாவாகும். இதற்குமுன் பியாங்காங் தனது ராணுவ ஆண்டுவிழா அணிவகுப்பை ஏப்ரல் 25ஆம் தேதி நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்