வட கொரியாவில் நடந்தது ராணுவ அணிவகுப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிம் ஜாங்-உன்னும், அவரது மனைவி ரி சோல்-ஜூவும் ராணுவ அணிவகுப்பில் புகழப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு ஒரு நாளுக்கு முன்னர், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங்-உன் பங்கேற்ற ராணுவ அணிவகுப்பை வட கொரியா நடத்தியுள்ளது.

வட கொரியா அதனுடைய ராணுவ அணிவகுப்பை பெருமையாக அடிக்கடி கூறிக்கொள்கிறது. ஆனால், தாமதமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி காணொளிகள் வழியாகவே தகவல்கள் வெளியாகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கொரிய மக்கள் ராணுவத்தை நிறுவிய 70வது ஆண்டை வட கொரியாவின் இந்த ராணுவ அணிவகுப்பு அடையாளப்படுத்துகின்றது.

இந்த அணிவகுப்பு வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இதனை முன்னரே நடத்தியிருப்பது குளிர்கால ஒலிம்பிக் போட்டி மூலம் வட மற்றும் தென் கொரிய உறவுகளை புதுப்பித்து கொள்வதற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆனால், வட கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவை தங்கள் அதிபர் சனிக்கிழமை சந்திப்பார் என்று தென் கொரியா அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

மூன் ஜியே-இன் 22 பேர் அடங்கிய இந்த அணியோடு மதிய விருந்து உண்பார்.

இந்த அணியில், வட கொரியாவின் சம்பிரதாய தலைவரான கிம் யோங்-நாமும், கிம் ஜாங்-உன்னின் செல்வாக்கு மிக்க தங்கையான கிம் யோ-ஜாங்கும் அடங்குகின்றனர்.

படத்தின் காப்புரிமை KCNA
Image caption 1987ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் கிம் யோ-ஜாங், மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளும், கிம் ஜாங்-உன்னின் சகோதரியும் ஆவார்.

இந்த இருவரும் வட கொரியாவின் ராணுவ அணிவகுப்பில் இருந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: