அமெரிக்க பங்குச் சந்தை சரிவு: டோக்கியோவில் எதிரொலி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
அமெரிக்க பங்குச் சந்தை சரிவு: டோக்கியோவில் எதிரொலி
வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக டோக்கியோவின் பங்குச் சந்தை மதிப்பு மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகள் தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நியுயார்க்கில், டவ் ஜோன்ஸின் புள்ளிகள் 1000க்கு அதிகமாக குறைந்துள்ளது; பணவீக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்தால் சரிந்தால் மத்திய வங்கி வட்டி விகித்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.


பட மூலாதாரம், HANDOUT
ரோஹிஞ்சா இன மக்கள் சிலர் சிப்பாய்கள் மற்றும் கிராமவாசிகளால் கொல்லப்பட்டது குறித்த விசாரணை விவரங்களை ராயட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
இதனால் மியான்மரில், ராயட்டர்ஸின் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்முகமை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ரக்கைன் நகரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் 10 பேர் சட்ட விரோதமாக கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக ராயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பாவாடை தடைக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம், Mariana duque diez
"சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனம் சிதறாமல் இருக்க பெண் மாணவர்கள் குட்டை பாவாடை அணிய கூடாது" என தடைவிதித்துள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்திற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனை எதிர்க்கும் விதமாக ஆண், பெண் என இருதரப்பு மாணவர்களும் குட்டை பாவாடை அணிய வேண்டும் என பல்கலைக்கழக வளாகத்தில் பிரசாரம் மேற்கொண்டனர் மாணவர்கள்.

ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரிட்டிஷார் இருவர் கைது
ஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரிட்டிஷார் இருவரை சிரிய குர்திஷ் போராளிகள் பிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், KOTEY/FAMILY HANDOUT
கைது செய்யப்பட்ட 34 வயது அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் 29 வயது எல் ஷஃபி ஆகிய இருவரும் அக்குழுவில் நீண்ட நாட்கள் பிடிப்படாமல் இருந்த கடைசி உறுப்பினர்கள்.

வட கொரிய அதிகாரிக்கு அனுமதி
சர்வதேச தடையில் இருக்கும் வட கொரிய அதிகாரியான சுவே வி தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அவர் கிம் ஜான் உன்னின் சகோதரியுடன் ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கு கொள்வார். எந்தவித ஆட்சேபனையும் எழவில்லை என்பதால் சுவேவிற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்