இயற்கை வழங்கிய சிறந்த தோட்டங்கள்- புகைப்படத் தொகுப்பு

2018 ஆம் ஆண்டு சர்வதேச தோட்டக்கலை புகைப்படக் கலைஞர்களின் போட்டியில் பிரேசிலிலுள்ள ஸெராடோ என அறியப்படும் பரந்த சுற்றுச்சூழல் மண்டலத்தின் புகைப்படம் முதலிடம் பெற்றுள்ளது.

பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவை சேர்ந்த மார்சியோ கேப்ராலின் எடுத்த இந்த புகைப்படத்திற்கு 'ஸெராடோ சன்ரைஸ்' என்று தலைப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Marcio Cabral

பட மூலாதாரம், Mark Bauer

படக்குறிப்பு,

டோர்செட், ஸ்டோபரோ ஹீத் தேசிய இயற்கைப் பாதுகாப்பிடத்தில், ஊதா புதர் செடியை கம்பள விரிப்பை போல மார்க் பேவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Annie Green-Armytage

படக்குறிப்பு,

ஜெர்மனியில் பவாரியாவில் நிலவு கேட் என்று அழைக்கப்படும் ஹாபிட் கதவு ஒன்றை கண்டுபிடித்து அன்னி கிரீன்-ஆர்ட்டேஜ் புகைப்படம் எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Shaofeng Zhang

படக்குறிப்பு,

உருளுவது போன்ற தோற்றமுடைய மலைகள், சீனாவில் ட்சஜியாங் மாகாணத்தில் பொன்னிறத்தில் தோன்றும் அரிசி பயிரிடுதலை காட்டுகின்றன, இந்த புகைப்படம் ஷௌஃபெங் ட்சாங் அவர்களால் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Yi Fan

படக்குறிப்பு,

சீனாவின் யுன்னனிலுள்ள மலைகளில் மூலிகை குணமுடைய இந்த அழியும் விளிம்பிலுள்ள செடி உயரமாக வளர்ந்துள்ளதை ஈய் ஃபான் படம் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், Steve Lowry

படக்குறிப்பு,

ஒளியை ஒருமுகப்படுத்தி மர அமைப்பின் தோற்றத்தை உருவாக்கி காட்டியுள்ளார் வட அயர்லாந்தை சேர்ந்த ஸ்டீவ் லோரி.

பட மூலாதாரம், Mauro Tronto

படக்குறிப்பு,

இத்தாலியில் பைட்மண்டில் உள்ள வால் பஸ்காக்னாவை எடுத்துள்ள இந்தப் படப்பிடிப்புக்கு மியூரோ ட்ரோன்டோ மிகவும் பாராட்டப்பட்டார்.

பட மூலாதாரம், Henrik Spranz

படக்குறிப்பு,

ஆஸ்திரியாவின் வியன்னாவில் காட்டு வெள்ளெலி ஒன்று மலர் ஒன்றை முகர்ந்து பார்க்கிறது. ஹென்றிக் ஸ்ப்ரான்ஸ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Marianne Majerus

படக்குறிப்பு,

இந்தப் பனியால் மூடிய நிலப்பகுதி லக்சம்பர்க்கில் உள்ள அன்செம்பர்க் புதிய கோட்டையில் மரியான் மாஜெரஸால் படம் பிடிக்கப்ப்பட்டது.

பட மூலாதாரம், Cathryn Baldock

படக்குறிப்பு,

லில்லி பட்டைகளை ஒன்றன் மீது ஒன்று இருக்க செய்து, அவற்றின் அழகையும், சிக்கல் நிறைந்ததையும் காட்டியதன் மூலம் கருத்து வரையறை பிரிவில் கத்தன் பால்டோக் விருது வென்றார்.

பட மூலாதாரம், John Glover

படக்குறிப்பு,

கிழக்கு சுஸெக்ஸில் ஜான் குளோவர் இந்த சூரிய உதயத்தை படம் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், Alan Price

படக்குறிப்பு,

வேல்ஸில் குயேநடிலில் தன்னுடைய கூட்டை கட்டுவதற்காக தாவரங்களை தேடுகின்ற கறுப்பு நிற பெண் பறவை சற்று இளப்பாறுவதை ஆலன் பிரைஸ் கண்டுள்ளார்.

பட மூலாதாரம், Nigel McCall

படக்குறிப்பு,

வேல்ஸில் கார்மாதென்ஷீரில் அபெர்கிளாஸ்னி தோட்டத்தில், ஆகஸ்ட் மாதம் காண கிடைக்கும் பழங்கள் மற்றும் பூக்களின் எழில்மிகு காட்சியை நிகல் மின்கால் படம் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், Minghui Yuan

படக்குறிப்பு,

சீனாவின் வுஹான் நகரில் இந்த கம்பளிப்பூச்சியின் வண்ணமயமான மொஹிகான் வேறுபட்டதொரு சிகை அலங்காரம், மிங்குய் யுவான் என்பரால் படம் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Anne Maenurm

படக்குறிப்பு,

ஸ்லோவேனியாவில் உள்ள கோலிக்காவின் உச்சியில் உள்ள சரிவு மே மாத இறுதியில் காட்டு நரிசிஸால் மூடப்பட்டிருப்பதை அன்னே மேனூரும் படமாக்கியுள்ளார்.

பட மூலாதாரம், Hans Van Horssen

படக்குறிப்பு,

ஹெலெனியத்தை பூவில் தன்னுடைய இளம் சிலந்தியை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு சிலந்தி வலை ஒன்றை உருவாக்கியது நெதர்லாந்தை சேர்ந்த ஹேன்ஸ் வான் ஹோர்ஸ்சனால் பார்த்துள்ளார்.

பட மூலாதாரம், Andrea Pozzi

படக்குறிப்பு,

கனடாவின் யூக்கோன் எல்லையிலுள்ள டூம்ஸ்டோன் டெர்ரிடோரியல் பூங்காவோடு உள்ள பார்வையில் ஆண்ட்ரியா போஸ்ஸி எடுத்த இந்தப் புகைப்படம் ஒரு பிரிவில் முதலிடம் பிடித்தது.

பட மூலாதாரம், Alison Staite

படக்குறிப்பு,

லண்டனில் கிவ்விலுள்ள அரச உயிரியல் பூங்காவில் சூரியனால் ஒளியேற்றப்பட்டதைபோல இந்தப் பூக்களை அலிசன் ஸ்டேய்ட் கேமரா கண்களால் படம் பிடித்துள்ளார்

பட மூலாதாரம், Volker Michael

படக்குறிப்பு,

ஜெர்மனியில் முழுமையாக பூத்திருந்த விஸ்டாரியாவைக் புகைப்படம் எடுத்ததற்காக வோல்கர் மைக்கேல் பாராட்டப்பட்டார்.

பட மூலாதாரம், Frantisek Rerucha

படக்குறிப்பு,

உலர்ந்த மலர்களை படம் பிடித்து வழங்கிய தொகுப்புக்கு ஃபிரண்டிஸெக் ரெருச்சா பாராட்டப்பட்டார்.

பட மூலாதாரம், William Dore

படக்குறிப்பு,

ஸ்காட்லாந்தில் மூடுபனி மற்றும் மழையில் மூடியிருந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைன் மரத்தொகுதியை வில்லியம் டோரே படம் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், Masumi Shiohara

படக்குறிப்பு,

பிளம் பழத்தின் இந்த வாழ்க்கை முடிவு புகைப்படம் மசுமி ஷியேஹாராவால் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Clay Bolt

படக்குறிப்பு,

அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் நோய்களால் வட அமெரிக்காவின் தேனீக்களின் இடம்பெயர்வை உணர்த்துவதற்காக, கிளே போல்ட் ஒரு புகைப்படத் தொடரை படம்பிடித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :