வான் கருணை: “கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்ட கேப் டவுனில் பெய்தது மழை”

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

கேப் டவுனில் மழை

பட மூலாதாரம், AFP/Getty Images

வறட்சியால் சூழப்பட்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள கேப் டவுனில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மிமி மழை பெய்துள்ளது. சிறிய அளவிலான மழைதான் என்றாலும், இதனைஅம்மக்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். மக்கள் வீட்டிற்கு வெளியே வந்து மழையில் நனைத்து, இந்த வானிலைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கினர். மழையை இயன்ற அளவு பாத்திரங்களிலும் சேமித்து வைத்தனர்.

இனவெறி எதிர்ப்பு பேரணி

பட மூலாதாரம், Reuters

இத்தாலிய நகரமான மாட்ச்ராட்டாவில் ஆயிரகணக்கான மக்கள் இனவெறிக்கு எதிராக பேரணி சென்றார்கள். வலதுசாரி செயற்பாட்டாளர் ஒருவர், குடியேரிகள் என்று நினைத்து ஆறு பேர் மீது தாக்குதல் மேற்கொண்டார். இத்தாலியில் வளர்ந்து வரும் இன வெறிக்கு எதிராக மக்கள் இந்த பேரணியை மேற்கொண்டுள்ளார்கள்.

கொரிய உறவு

பட மூலாதாரம், KCNA

வட கொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதில் தென் கொரியாவும் அமெரிக்காவும் புரிந்துணர்வுடன் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறி உள்ளார். தென் கொரியாவில் நடைபெறும் குளிர் கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கு பெறுவதை அடுத்து இரு நாட்டு உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம், தங்கள நாட்டுக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாரு தென் கொரிய அதிபருக்கு அழைப்பு விடுத்தார். வட கொரியாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மற்றும் அதுகாட்டும் சமிக்ஞையிலிருந்து அமெரிக்கா தள்ளியே நிற்கிறது.

"ஃபர்தா அணிய தேவை இல்லை"

பட மூலாதாரம், AFP/Getty Images

செளதி பெண்கள் ஃபர்தா அணிய தேவையில்லை என்று தலைமை மதபோதகர் ஒருவர் கூறி உள்ளார். பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும். அதற்காக ஃபர்தா அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்கிறார் மூத்த அறிஞர்கள் சபையின் உறுப்பினரான ஷேக் அப்துல்லா அல் முத்லாக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :