பாலியல் புகார்: திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

ஹார்வி வைன்ஸ்டீனிடமிருந்து ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக கூறி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைன்ஸ்டீன் மீது வழக்கு தொடுத்துள்ளார் நியூயார்க் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

படத்தின் காப்புரிமை ALEXANDER KOERNER/GETTY IMAGES
Image caption ஹார்வி வைன்ஸ்டீன்

வைன்ஸ்டீன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன. ஆனால், பரஸ்பர சம்பந்தம் இல்லாமல் தான் யாருடனுன் உடலுறவு கொள்ளவில்லை என்றுகூறி வைன்ஸ்டீன் தன் மீதான புகார்களை மறுத்து வருகிறார்.

வைன்ஸ்டீன் நிறுவனம் மற்றும் வைன்ஸ்டீன், அவரது சகோதரர் ராபர்ட் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக் கூறினார்.

பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல், அச்சம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு பணியிடத்திற்கு ஒவ்வொரு நியூயார்க் குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் புகார்கள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹார்வி வலுக்கட்டாயமாக என் வீட்டிற்கு நுழைந்து என்னை வல்லுறவு செய்தார் : ஆனபெல்லா ஸ்கியோரா

ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிராக பல பெண்கள் பாலியல் புகார்களை அளித்துள்ளனர். 1992 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருக்கும் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வலுக்கட்டாயமாக நுழைந்து ஹார்வி தாக்குதல் நடத்தியதாக இத்தாலிய அமெரிக்க நடிகை ஆனபெல்லா ஸ்கியோரா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தி நியு யார்கர் நாளிதழுக்கு நடிகை பேட்டியளித்து இருந்தார்.

மேலும் அந்தப் பேட்டியில், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகள் தான் ஹார்வியால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் ஆனபெல்லா குற்றஞ்சாட்டி இருந்தார்.

நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி, 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

நிறுவனத்தை விற்க முயற்சி

இதற்கு மத்தியில் நிறுவனத்தை விற்கும் முயற்சியில் வைன்ஸ்டீன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெண் தொழிலதிபர்களான மரியா மற்றும் சுவீட் ஆகியோர் நிறுவனத்தை 500 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

குடிமக்களுக்கு இந்த விற்பனை முயற்சி தெரிய வந்ததை அடுத்து , பேச்சுவர்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :