தேம்ஸூக்கு அருகில் 2-ஆம் உலகப்போர் வெடிகுண்டு: மூடப்பட்டது லண்டன் நகர விமான நிலையம்

தேம்ஸ் நதிக்கு அருகில் 2ம் உலகப்போர் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

விமான நிலையம் மூடப்பட்டு, எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 16 ஆயிரம் பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டு ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ் வி டோக்கில், கிழக்கு லண்டன் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டிருந்த பணி நடைபெற்றபோது கண்டுபிடிக்கப்பட்டது என்று லண்டன் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை PA

நேற்றிரவு 10 மணிக்கு இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதனை அகற்றிவிட அரச கடற்படையோடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக மாநகர காவல்துறை கூறியுள்ளது.

மொத்தம் 261 வருகை மற்றும் புறப்பாடுகள் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய இணையதளம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை PA
Image caption 400 மில்லியன் பவுண்ட் செலவில் விரிவாக்கம் செய்யப்படும் விமான நிலையம்

விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், அங்கு செல்ல வேண்டாம் என்றும், அவரவர் விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்