ஒரு லட்சம் டாலர் பணத்தை விழுங்கியதா இந்த பாம்பு?

நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர்.

படத்தின் காப்புரிமை SPL
Image caption உண்மை என்றால், பாம்பு குறைந்தபட்சம் 36,000 நோட்டுகளை சாப்பிட்டிருக்க வேண்டும்

நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு வாரிய ஊழியர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான 36 மில்லியன் நைரா அளவிலான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக ஃபிலோமினா ச்சிசே என்ற ஊழியர் தணிக்கைக் குழுவிடம் கூறியதை அதிகாரிகள் நிராகரித்தனர்.

தேர்வு கட்டணம் வசூலிக்கும் எழுத்தராக பணியாற்றும் ஃபிலோமினா ச்சிசே நைஜீரிய தேர்வுக் வாரியத்தின் அலுவலகத்தில் பணிபுரிபவர்.

ஃபிலோமினா ச்சிசே கூறியதை நிராகரித்த தேர்வு குழு சேர்க்கை மற்றும் மெட்ரிகுலேஷன் கூட்டு வாரியம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக பிபிசியிடம் கூறியது.

சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை நைஜீரிய மக்கள் கேலி செய்தனர்.

ஒரு பாம்பால் இந்த அளவுக்கு பணத்தை கையாள முடியாது என்று ஒருவர் டிவிட்டர் செய்தியில் பகடி செய்கிறார்.

பாம்புக்காக ஒரு ட்விட்டர் கணக்கு கூட அமைக்கப்பட்டுவிட்டது. மிகவும் களைப்பாக இருக்கிறது என்று அது கூறுகிறது.

"பணம் விழுங்கும் பாம்பின் மீது எந்தக் கருணையும் காட்டப்படாது" என்று, கழுகு ஒன்று பாம்பை தூக்கிச் செல்லும் புகைப்படத்துடன் நைஜீரிய ஊழல் தடுப்புக் குழு, கேலியாக ஒரு ட்விட்டர் பதிவை பதிலாக வெளியிட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்