இரட்டைச் சகோதரரை விட்டுவிட்டு சிறையில் இருந்து தப்பியவர் சிக்கியது எப்படி?

அலெக்ஸாண்டர் டெல்கடோ படத்தின் காப்புரிமை PERUVIAN INTERIOR MINISTRY
Image caption அலெக்ஸாண்டர் டெல்கடோ

தனக்குப் பதிலாக தன்னுடன் இரட்டையராகப் பிறந்த சகோதரரை விட்டுவிட்டு, சிறையில் இருந்து தப்பித்து சென்ற நபரை ஒரு வருடம் கழித்து பெரு நாட்டின் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

குழந்தைக்கு பாலியல் தொந்தவு கொடுத்தது மற்றும் கொள்ளையடித்தது ஆகிய குற்றங்களுக்காக, அலெக்ஸாண்டர் டெல்கடோ 16 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரது இரட்டை சகோதரர் ஜியான்காரோலோ, இவரை பார்க்க சிறைக்கு வந்துள்ளார். அப்போது தனது சகோதரரை இழுத்து, அவரது ஆடைகளை மாற்றிக்கொண்டு சிறையை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஜியான்காரோலோவின் கைரேகைகள் பதிவு செய்தபோது, ஆள் மாறாட்டம் நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 13 மாதங்களுக்கு பிறகு அலெக்ஸாண்டர் டெல்கடோ கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் பற்றி துப்பு தருபவர்களுக்கு உரிய வெகுமதி தரப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறிய பிறகு, அவர் பிடிபட்டார்.

இப்போது அவர் அதிகபட்ச பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது சகோதரர் மீது எந்த குற்றச்சாட்டும் பதியப்படாததோடு, அவர் விடுதலையும் செய்யப்பட்டார்.

''என் அம்மாவைப் பார்க்கவே தப்பித்து சென்றேன்'' என பிடிபட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் அலெக்ஸாண்டர் டெல்கடோ கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்