இனக்குழு மோதல்களால் அகதிகளான காங்கோ மக்கள்

காங்கோ ஜனநாயக குடியரசில் ஏற்பட்டுள்ள இனக்குழு மோதல்களால், ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து அண்டை நாடான உகாண்டாவிற்கு தப்பிச் செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இடூரி மாகாணத்தில் தீவிரமடைந்துள்ள தாக்குதல்கள், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட காரணமான இனக்குழு மோதலை மீண்டும் கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு எல்லையில் உள்ள ஆல்பர்ட் ஏரியை கடந்து தப்ப முயலும் சிலரை சந்திப்பதற்காக கிழக்கு உகாண்டாவிற்கு சென்றது பிபிசி குழு.