ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

மோதல் பிராந்தியத்தில் வாழும் குழந்தைகள்

படத்தின் காப்புரிமை Reuters

உலககெங்கும் ஒவ்வொரு ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை மோதல் பிராந்தியத்தில் வாழ்ந்து வருவதாக 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பு வெளியிட்ட ஒரு புதிய அறிக்கை.தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது ஆயுத மோதல் நடைபெறும் பகுதிகளில் வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து நிலவுவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் புற்றுநோய் இடையே தொடர்பு?

படத்தின் காப்புரிமை WILDPIXEL
Image caption பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் புற்றுநோய் இடையே தொடர்பு?

மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் புற்றுநோய் இடையே ஒரு தொடர்பு உள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வொன்று பரிந்துரைத்துள்ளது.

கேக்குகள், சிக்கன் நக்கட்ஸ் மற்றும் அதிக அளவில் தயாரிக்கப்பட்ட ரொட்டி உள்பட பல உணவு வகைகளை அவர்கள் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

ஜிம்பாப்வே முன்னாள் பிரதமர் மரணம்

படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வே எதிர்கட்சித் தலைவரான மார்கன் ஸ்வான்கிராய் தென் ஆப்ரிக்காவில் காலமானதாக அவரது கட்சியை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

65 வயதான ஜிம்பாப்வே முன்னாள் பிரதமரான மார்கன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: