உலகம் முழுதும் யுத்தங்களுக்கு மத்தியில் வாழும் வாழும் 35.7 கோடி குழந்தைகள்

உலகம் முழுதும் யுத்தங்களுக்கு மத்தியில் வாழும் வாழும் 35.7 கோடி குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக "சேவ் த சில்ரன்" என்ற குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் வாழ்ந்து வருவதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பட மூலாதாரம், Reuters

இது நடத்தியுள்ள புதிய ஆய்வில் 35 கோடி 70 லட்சம் குழந்தைகள் போர் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

1995ம் ஆண்டு 20 கோடி குழந்தைகளே போர் பகுதிகளில் வாழ்வதில் இருந்து 75 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன.

ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்!

சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளன.

காணொளிக் குறிப்பு,

ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழந்தைகள் பெரும்பாலும் போர் நடைபெறும் இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அங்கு வாழும் குழந்தைகளில் 5இல் இரண்டு பேர் போர் நடைபெறும் இடத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அல்லது மரண தாக்குதல் நடைபெறும் பிற இடங்களில் வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், UOSSM

படக்குறிப்பு,

மருத்துவமனைகளில் ஏவுகணை தாக்குதல்

5இல் ஒருவர் போர் நடைபெறும் இடங்களில் வாழ்வதால் ஆபத்தான பகுதிகளில் ஆஃப்ரிக்கா 2வது இடம் பெற்றுள்ளது.

உலகிலுள்ள வாழும் பாதி குழந்தைகளில் அதாவது 16 கோடியே 50 ஆயிரம் பேர் போர் உருவாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

"கடுமையான உரிமை மீறல்கள்" நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் மன்றம் கூறுகின்ற பகுதிகளில் இந்த குழந்தைகள் அனைத்தும் வாழ்ந்து வருகின்றன.

"கடுமையான உரிமை மீறல்கள்"

  • கொலை செய்தல் மற்றும் ஊனமுற செய்தல்
  • குழந்தைகளை படையில் சேர்த்தல் மற்றும் குழந்தைகளை பயன்படுத்துதல்
  • பாலியல் வன்முறை
  • கடத்தல்
  • பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் தாக்குதல்கள்
  • மனித நேய உதவிகள் மறுப்பு

ஐக்கிய நாடுகள் மாமன்றம் மற்றும் பிற ஆய்வு தரவுகளை தன்னுடைய அறிக்கையில் பயன்படுத்தியுள்ள "சேவ் த சில்ரன்" அமைப்பு, மோதலில் ஈடுபட்டுள்ள படைப்பிரிவுகள் ஒவ்வொன்றும் பதிவு செய்கின்ற தரவுகளில் மாபெரும் வேறுபாடு காணப்படுவதை விமர்சித்திருக்கிறது.

இந்த அமைப்பின் கவலைகள் ஒருபுறமிருக்க, 2010ம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் அதிகரிப்பு 300 சதவீதமாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மாமன்றம் உறுதிப்படுத்திய சம்பவங்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களிலும், பெரு நகரங்கிலும் அதிகரித்து வருகின்ற மோதல் போக்கு மற்றும் சமீபத்திய நீண்டகால மற்றும் சிக்கலான ஆயுத மோதல்களும் ஆபத்தான இடங்கில் வாழுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters

தீவிரவாத குழுக்களால் திட்டமிட்டு நடத்தப்படும் மனிதநேய பணிகளுக்கான தடையும், ஏமன் மற்றும் சிரியா நாடுகளில் காணப்படும் நீண்டகால முற்றுகைகளும் இதற்கு காரணமாக உள்ளன.

போரிடும்போது முற்றுகை இடுவது மற்றும் அடிப்படை வசதிகள் கடைக்காமல் பட்டினிக்கு உள்ளாக்கும் வியூகங்கள் அதிகரித்துள்ளன.

இவைகள் குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர் ஆயுதாமாக பயன்படுத்தப்பட்டு, ஆயுதப் படையிரையும், ஒட்டுமொத்த சமூகத்தினரை சரணடைய செய்யும் முயற்சியாக கருதப்படுகிறது இந்த தகவல் தெரிவிக்கிறது.

மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கமாகியுள்ளது.

குழந்தைகளை பாதுகாப்பதற்காக மேம்பட்ட சர்வதேச சட்ட வரையறைகள் இருக்கின்றபோதிலும், உலக அளவில் போரிடுகின்ற நாடுகளில் அதிக கொடூரமான வியூகங்கள் பயன்படுத்தப்படுவதாக "சேவ் த சில்ரன்" அமைப்பு தெரிவித்திருக்கிறது.

காங்கோ: பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் குழந்தைகள்

காணொளிக் குறிப்பு,

காங்கோ: பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் குழந்தைகள்

குழந்தைகளை படைவீரர்களாக தேர்ந்துதெடுத்து பயிற்சி அளிப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை இதில் அடங்குகின்றன. ஆனால், பாலியல் துஷ்பிரயோகத்தை தகவல் அளிக்கும் தயக்கம் காரணமாக இவை பெரிய அளவில் வெளியே தெரிய வருவதில்லை.

ரசாயன ஆயுதங்கள், நிலக் கண்ணிவெடிகள் மற்றும் கொத்தெறி குண்டுகள் போன்ற சில ஆயுதங்களால் குழந்தைகள் இறப்பதும், ஊனமாக்கப்படுவதும் குறைந்திருந்தாலும், பிற ஆபத்துக்கள் அப்படியேதான் நிலவுகின்றன.

குழந்தை தற்கொலைதாரிகளை பயன்படுத்துதல், படையினர் மற்றும் குடிமக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் அழித்துவிடும் பேரல் வெடிகுண்டுகள், மேம்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் பரவலாக பயன்படுத்தப்படுவது அதிகரித்திருப்பதாக இற்த அமைப்பின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

காயமடைதல், இறப்பது போன்ற ஆபத்துக்களை எதிர்நோக்குகின்ற இந்த மோதல் பகுதிகளில் வாழும் குழந்தைகள், அடிப்படை சுகாதர, கல்வி வசதிகள் இன்றியும், ஊட்டச்சத்துயின்மை இல்லாமலும் துன்பப்படுகின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் இந்தோனீசிய குழந்தைகள்

காணொளிக் குறிப்பு,

ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் இந்தோனீசிய குழந்தைகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :