வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை - ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை

பட மூலாதாரம், Getty Images

வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதாக ஆஃபிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

அமெரிக்க தேர்தல் விவகாரம்- பேனனிடம் விசாரணை

பட மூலாதாரம், EPA

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பேனனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

இதுகுறித்த விசாரணையை முன்னடத்தி வரும் சிறப்புக் குழுத் தலைவர் ராப்ர்ட் முல்லரை, பேனன் இந்த வாரம் இரண்டு நாட்களுக்கு மேல் இதற்காக சந்தித்துள்ளார்.

ரஷியா: எதிர்கட்சி தலைவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு தடை

பட மூலாதாரம், Getty Images

ரஷியாவின் முக்கிய எதிர்கட்சி தலைவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த பதிவுகளுக்கு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தடை விதித்துள்ளது.

அந்நாட்டின் இணைய தணிக்கைத் துறையின் கோரிக்கையை ஏற்று ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த அலெக்சை நவல்னியின் பதிவுகளுக்கு கட்டுப்பாடுகளை இன்ஸ்டாகிராம் விதித்துள்ளது.

அமெரிக்கா- துருக்கி முக்கிய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

நேட்டோ கூட்டணியில் இருக்கும் பதட்டங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், துருக்கி அதிபர் ரசெப் தாயினுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தை வெளிப்படையாக மற்றும் முக்கியமாக இருந்ததாக அரசுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: