மெக்ஸிகோவில் 7.2 அவிலான கடும் நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்

மெக்ஸிகோவில் 7.2 அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெக்ஸிகோவில் நிநடுக்கம்

படத்தின் காப்புரிமை Reuters

தென் மேற்கு மெக்ஸிகோவில் வஹாக்கா மாநிலத்தில் ஒயாசகா நகரத்திற்கு அருகில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மெக்ஸிகோவில் ஆட்டம் கண்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் மையம் வஹாக்கா மாநிலத்தின் பினோடெபா டி டென் லுஸ் நகருக்கு அருகில் 24.6 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

வஹாக்கா மாநிலத்தில் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், மெக்ஸிகோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களைவிட்டு வெளியேறுவதை காணக்கூடியதாக இருந்தது.

மெக்ஸிகோ நகரம் உள்பட 5 மாநிலங்களில் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள், குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் இருக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

சரியாக கையாளவில்லை - எஃப் பி ஐ

படத்தின் காப்புரிமை Getty Images

ஃபுளோரிடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சுமத்தப்பட்ட பதின்ம வயது நபர் குறித்து முன்பே எழுந்த எச்சரிக்கையை தாங்கள் சரியாக கையாளவில்லை என எஃப் பி ஐ தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று ஃபுளோரிடாவில், பார்க்லாண்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு? 13 ரஷியர்கள் மீது குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AFP/Getty

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக 13 ரஷியர்கள் மீது எஃப்பிஐ குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு கவுன்சில் ராபர்ட் முல்லர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிபராக பதவியேற்ற பின் முதல் உரை

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சிரில் ராமபோசா

தென் ஆஃப்ரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள சிரில் ராமபோசா, நாட்டிற்கான முதல் உரையில் "புதிய விடியலை" குறித்து பேசியுள்ளார். நாட்டில் உள்ள ஊழல் நிலையை மாற்றப் போவதாகவும் அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: