சீனப் புத்தாண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிறவெறி இருந்ததாக குற்றச்சாட்டு

  • 18 பிப்ரவரி 2018

சீனாவில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் சந்திர நாள்காட்டியின்படி கடைபிடிக்கப்படும் புத்தாண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நிற வெறியோடு தயாரிக்கப்பட்டதாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை YOUTUBE/CCTV

இந்த வேளையில் வழக்கமாக கொண்டாடப்படும் சீன ஆஃப்ரிக்க உறவுகள் பற்றிய நகைச்சுவையில் கறுப்பு நிற மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிக பெரிய பிட்டத்தோடு ஆசிய நடிகை ஒருவர் தோன்றுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பனையை பயன்படுத்தி கறுப்பு நிற மக்களை இகழ்வது மிகவும் மோசமானது என்று பரவலான விமர்சனத்துக்கு இந்த நிகழ்ச்சி இலக்காகியுள்ளது.

அரசு தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பல்சுவை நிகழ்ச்சியானது சீனாவில் மிகவும் பிரபலம் என்பதோடு, இதற்கு 80 கோடி மக்கள் இதனை பார்த்தும் ரசிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி ஆஃப்ரிக்கர்களை இகழும் நோக்கத்தோடு பயன்படுத்தப் பட்டிருக்காது என்று சில விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பிற இன மக்களை காட்டுகின்றபோது, சீன பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்திருப்பது இது முதல்முறையல்ல.

வியாழக்கிழமையன்று சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து 4 மணிநேரம் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சி என்றும் அறியப்படுகிறது.

படத்தின் காப்புரிமை நாடகம்

இது, உலகில் மிக அதிகமான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பழங்குடியினரின் ஆடையில் தோன்றும் ஓர் ஆஃப்ரிக்க நடனக் குழுவினரோடும், வரிக்குதிரைகள், ஒட்டகச் சிவிங்கிகள், சிங்கங்கள் மற்றும் கலைமான்கள் போன்று வேடமிட்டவர்களைக் கொண்டும் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து, தன்னுடைய தாயை சந்திக்கிறபோது, இளம் கறுப்பு நிற பெண் சீன ஆண் ஒருவரிடம் தன்னுடைய கணவராக நடிக்க கேட்டுக்கொள்வதாக நகைச்சுவை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.

இதில் தாய் வேடமிட்டவரின் ஒப்பனை மோசமாக இருந்தது. அவர் மிக பெரிய பிட்டத்தோடும் பாரம்பரிய உடை அணிந்தும் இதில் காணப்படுகிறார்.

அவர் தன்னுடைய தலையில் பழத் தட்டு வைத்துக் கொண்டு மேடையில் செல்கிறார். குரங்கு உடை அணிந்த கறுப்பு நடிகர் என்று நம்பப்படும் ஒருவர் கூடை ஒன்றை தூக்கி கொண்டு அவருடன் செல்கிறார்.

சீன-இந்திய ஒத்துழைப்பை புகழும் இந்த குறு நாடகம், சீன முதலீடுகளால் எந்த அளவுக்கு ஆஃப்ரிக்கர்கள் பயனடைகிறார்கள் என்பதையும், ஆஃப்ரிக்கர்கள் சீனாவுக்கு எவ்வளவு நன்றியுணர்வுடன் இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

ஒரு காட்சி, சீனாவை மிகவும் நேசிப்பதாக இந்த ஆஃப்ரிக்க தாய் உணர்ச்சிவசப்பட்டு கூறுவதை காட்டுகிறது.

கடந்த ஆண்டுகளில் சீனா பல ஆபிரிக்க நாடுகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளது.

நைரோபி-மொம்பாசா ரயில்வே திட்டத்தில் பணியாற்றும் மக்கள், இந்த நிகழ்ச்சியில் பின்னணி ஓவியமாக இடம்பெற்றுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :