முனைவர் பட்டம் வழங்கியதில் முறைகேடு?: துணைவேந்தர் கைது

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

முனைவர் பட்டம் வழங்கியதில் முறைகேடு?

படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வே முன்னாள் அதிபரின் மனைவி கிரேஸ் முகாபேவுக்கு முனைவர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் ஜிம்பாப்வே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு, பிஎஹ்.டி ஆய்வுக்காக பதிவு செய்த சில மாதங்களில், கிரேஸுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக, முனைவர் பட்டம் பெற, குறைந்தது சில ஆண்டுகளாவது ஆகும் என்பது குறிப்பிடதக்கது.

இஸ்ரேல் குண்டுவெடிப்பு:

படத்தின் காப்புரிமை Reuters

இஸ்ரேல் - காஸா எல்லையில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் படுகாயமுற்றனர். அதில் இரண்டு ராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், பாலத்தீனக் கொடி பறந்துக் கொண்டு இருந்தது. அருகே சென்று பார்த்த போது,அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்தனர் என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். இதற்கு பதிலடியாக காஸாவில் உள்ள ஹமாஸ் துருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் எந்த உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பூகம்பம்... ஹெலிகாப்டர் விபத்து:

மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்ப சேதத்தினை பார்வையிட சென்ற அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ உள்துறை அமைச்சர் மற்றும் தென்மெற்கு ஓக்ஸாகா மாகாண ஆளுநர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்தனர். அந்த ஹெலிகாப்டர் தரை இறங்கும் போது, அங்கு இருந்த அவசர ஊர்தி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இங்கிலாந்தில் நிலநடுக்கம்:

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் 4.4 அளவிலான லேசான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் உணரப்பட்டது. உயிரிழப்பு மற்றும் பொருளாதார சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை. வேல்ஸ் பகுதி மற்றும் மேற்கு இங்கிலாந்து முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: