அமெரிக்க புலனாய்வு அமைப்பை கடுமையாக விமர்சிக்கும் டிரம்ப்... ஏன்?

ஃப்ளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்ப், "அந்த அமைப்பு தனது அதிக அளவிலான நேரத்தை டிரம்ப் பிரச்சாரத்துக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு உள்ளது என்று மெய்பிக்கத்தான் செலவிடுகிறது. ஆனால், எந்த தொடர்பும் இல்லை." என்று ட்வீட் செய்துள்ளார்.

துப்பாக்கிதாரி நிக்கோலஸ் க்ரஷ், ஃப்ளோரிடா பள்ளியில் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் இறந்தனர். இது குறித்து முன்னதே எஃப்.பி.ஐ-க்கு துப்பு கிடைத்தும், அந்த அமைப்பு துப்பாக்கிச் சூட்டை தடுக்க போதுமான முயற்சி எடுக்கவில்லை.

2012 ஆம் ஆண்டுக்குப் பின், பள்ளியில் நடந்த மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இது.

எதனை டிரம்ப் குறிப்பிடுகிறார்?

அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க தேர்தலில் தலையிட்டதாக 12 ரஷ்யர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது முக்கிய நகர்வாக கருதப்படும் இச்சூழலில், டிரம்ப் இவ்வாறாக ட்வீட் செய்துள்ளார்.

எப்படி எஃப்.பி.ஐ கோட்டைவிட்டது?

படத்தின் காப்புரிமை Getty Images

தங்களுக்கு வந்த தகவல்களை தாங்கள் சரியாக ஆராயவில்லை என்று எஃப்.பி.ஐ ஒப்புக் கொண்டுள்ளது.

எங்களுக்கு ஃப்ளோரிடா பள்ளி மீது தாக்குதல் தொடுத்துவர் குறித்து முன்பே தகவல் வந்தது. ஆனால், நாங்கள் அந்த தகவல்களை பின் தொடராமல் விட்டுவிட்டோம் என்று சொல்லி உள்ளது எஃப்.பி.ஐ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: