போகோ ஹராம்: 500 பேரை விடுதலை செய்தது நைஜீரியா

போகோ ஹராம் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 500 பேரை விடுதலை செய்துள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ்

போதிய ஆதாரங்கள் இல்லாததால், பெரிய அளவில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தவர்கள்.

இந்த விசாரணை தொடக்கப்பட்ட சில நாட்களிலேயே இதே காரணத்தால், நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கைஞ்சி நகரில் உள்ள ராணுவத் தடுப்பு முகாமில் இருந்து பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

போகோ ஹராம் தொடர்பான வழக்கில் டஜன் கணக்கானவர்கள் இந்த வாரம் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்