உச்சகட்ட தாக்குதலில் சிரியாவின் கிழக்கு கூட்டா நகரம்

உச்சகட்ட தாக்குதலில் சிரியாவின் கிழக்கு கூட்டா நகரம்

சிரியாவில் உள்ள கிழக்கு கூட்டாவில் பொதுமக்களை குறிவைத்து தீவிரப்படுத்தியுள்ள அரசின் தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக கள செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சிரியா ராணுவத்திடமிருந்து எவ்வித கருத்தும் வராத நிலையில், கிளர்ச்சியாளர்ளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அரசு கூறுகிறது.