நிகழ்ச்சி ஒலிபரப்பின்போது குழந்தை பெற்றெடுத்த வானொலி தொகுப்பாளர்

அமெரிக்க வானொலி தொகுப்பாளர் ஒருவர் தன்னுடைய நிகழ்ச்சி ஒலிபரப்பின்போது, குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @RADIOCASSIDAY/INSTAGRAM

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள "த ஆர்ச்" வானொலி நிலையத்தில் வார நாட்களில் காலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் காச்டேய் ப்ரோக்டர் என்பவர் செவ்வாய்கிழமையன்று தன்னுடைய நிகழ்ச்சி ஒலிப்பரப்பான நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

திங்கள்கிழமை அவருக்கு பிரவச வலி உண்டானது. அவர் பணியாற்றி வந்த வானொலி நிலையம், ப்ரோக்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையோடு ஒத்துழைத்து அவரது நிகழ்ச்சி ஒலிப்பரப்பாகிறபோது, குழந்தையை அவர் பெற்றெடுக்க செய்துள்ளது.

“2 வாரங்களுக்கு முன்னர் பிறந்துள்ள நிலையிலும், இந்த குழந்தை பிறந்திருக்கும் நேரம் ஒலிபரப்பு வாய்ப்பில் சிறந்ததொரு உற்சாக தருணம்” என்று ப்ரோக்டர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"என்னுடைய வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான நாளை என்னுடைய வானொலி நேயர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்திருப்பது மிகவும் சிறப்பு” என்று இந்த நிகழ்ச்சியை பற்றி ப்ரோக்டர் தெரிவித்துள்ளார்.

“இந்த வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகியபோது குழந்தை பெற்றெடுப்பது நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்வதன் நீட்சியாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குழந்தைக்கான பெயர் தேர்வு போட்டியில், நேயர்கள் தெரிவு செய்த "ஜேம்சன்" என்ற பெயரால் 3.35 கிலோ எடையுடைய இந்த குழந்தை அழைக்கப்படுகிறது.

பன்னிரண்டு வேடிக்கையான பெயர்களும், இந்த ஜோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரென்டு பெயர்களும் இந்தப் போட்டியில் இடம்பெற்றன.

ஜேம்சன் என்கிற பெயர் கிடைக்கிற வரை வாக்களித்து கொண்டிருந்ததாக இந்த நிகழ்ச்சி இயக்குநர் ஸ்காட் ரோடி "த ரிவர்ஃபிரான்ட் டைம்ஸ்" செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :