கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு: செளதி திட்டம்

  • 22 பிப்ரவரி 2018
திரையரங்கிற்கு அனுமதி வழங்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் காப்புரிமை Reuters

பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை துறையை மேம்படுத்தும் வகையில் செளதி அரேபியா 64 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது.

மரூன் 5 மற்றும் சர்கியூ டூ சோலெயில் (Maroon 5 and Cirque du Soleil) உட்பட இந்த ஆண்டு மட்டும் 5000 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக பொது பொழுதுபோக்குத் துறை தலைவர் தெரிவித்தார்.

ரியாத்தில் நாட்டின் முதல் ஓபரா ஹவுஸ் கட்டுமானமும் தொடங்கிவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானால் வெளியிடப்பட்ட விஷன் 2030 என்ற சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் இந்த முதலீடு.

நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தவேண்டும், எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே பொருளாதாரம் சார்ந்திருக்க்க்கூடாது, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் முதலீட்டை அதிகரிப்பது உட்பட பல மாற்றங்களை கொண்டுவர அவர் விரும்புகிறார்.

திரையரங்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேளிக்கை சினிமா மீதான தடையை தளர்த்தி இருந்தது செளதி அரசு.

சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், லாஸ் வேகாஸ் அளவிற்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரத்தை ரியாத் அருகே நிர்மாணிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters

இதுமட்டுமல்லாமல், செளதி அரபியா பெண்கள் தொடர்பான தங்கள் கடுமையான சட்டத்தை தளர்த்தி உள்ளது.

பெண்கள் கால்பந்தாட்ட போட்டியை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். ஜூன் மாதத்திலிருந்து பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அனுமதித்து இருந்தது.

பட்டத்து இளவரசர் முகமது, " அனைத்து சமய நம்பிக்கை, கலாசாரம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் செளதியை மீண்டும் மிதமான இஸ்லாமிய நாடாக மாற்றுவதுதான் தன் குறிக்கோள்" என்று தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்