குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா

குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா

போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வருவதில் ஐ.நா சபையில் தொடர்ந்து ஒத்த கருத்து எட்டப்படாததால், சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இறுதி நகரங்களில் ஒன்றான கிழக்கு கூட்டா மீது, சிரியா அரசுப் படைகள் மீண்டும் குண்டுமழை பொழிந்து வருகின்றன. சிரியாவில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த தீர்மானம் கொண்டுவர ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஓட்டெடுப்பு நடக்கிறது.ஆனால் ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. ஆறாவது நாளாக சிரியா அரசப்படைகள் நடத்தி வரும் சரமாரி தாக்குதல் காரணமாக கூட்டா நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.