உலகப் பார்வை: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: இராக்கில் 15 துருக்கிய பெண்களுக்கு தூக்கு தண்டனை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

15 பெண்களுக்கு தூக்குத் தண்டனை

பட மூலாதாரம், Getty Images

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவில் இணைவதற்கு முயற்சித்ததாக உறுதிசெய்யப்பட்ட துருக்கிய பெண்கள் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இராக் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆனால்,16 பெண்களுக்கு தூக்குத் தண்டனையும் , ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக மற்ற சில தகவல்கள் கூறுகின்றன.

சிரியாவில் தொடரும் போர்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம், கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

'அணுஆயுத பரவலை தடுப்பதே குறிக்கோள்'

பட மூலாதாரம், Getty Images

வட கொரியாவுடனான எந்த விதமான பேச்சுவார்த்தை நடந்தாலும், அந்நாட்டின் அணுஆயுத பரவலை தடுப்பதே அதன் குறிக்கோளாக இருக்குமென்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி தினத்தன்று வட கொரியா அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக தென் கொரியா கூறியுள்ளது.

'துப்பாக்கி மீதான தடைக்கு ஆதரவில்லை'

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் ஃபுளோரிடாவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியானதைத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் துப்பாக்கிகள் மீதான எந்தவிதமான தடையையும் ஆதரிக்கவில்லை என்று அந்நாட்டின் தேசிய துப்பாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துப்பாக்கி சார்ந்த கட்டுப்பாடுகளை பற்றி பேசியுள்ள நிலையில், என்.ஆர்.ஏவின் கருத்து அதற்கு எதிராக அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :