லெஸ்டரில் வெடிகுண்டு விபத்து: 6 பேர் காயம்

லெஸ்டரில் கடை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்தனர். லண்டன் நேரப்படி ஞாயிறன்று இரவு ஏழு மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

"இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக தற்போது எந்த அறிகுறியும் இல்லை" என போலிஸாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் உள்ள காயமடைந்தவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் அந்த பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை போன்ற பெரிய சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சிலர் அங்கு உதவி செய்து கொண்டிருந்தனர் பின்பு தீ பெரிதானவுடன் அனைவரும் அங்கிருந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்திற்கான காரணம், லெஸ்டர் போலிஸ் மற்றும் தீயனைப்பு மற்றும் மீட்பு சேவையினாரால் சேர்ந்து விசாரிக்கப்படும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ஆறு தீயனைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீயனைப்பு குழுவினர் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தீயனைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்