சண்டை நிறுத்த அறிவிப்பை மீறி சிரியாவில் தாக்குதல்

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்த பிறகும் அங்கு இரண்டாவது நாளாக தொடர்ந்து வான் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டன. அங்கு நடந்த சமீபத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் பத்து பேர் கொல்லப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரசுக்கு ஆதரவான படைகளால் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில், குளோரின் எரிவாயு பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவ பகுதியில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்கள் கூறியுள்ளனர்.