வீடியோ கேம் பதிவை சிரியா போர் காணொளி என ஒளிபரப்பிய ரஷ்ய தொலைக்காட்சி

சிரியாவில் போரிட்டு வருகின்ற ரஷ்யா ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ரஷ்ய பிரதான செய்தித் தொலைக்காட்சி வீடியோ கேம் ஒளிப்பதிவு ஒன்றை தவறுதலாக ஒளிபரப்பியுள்ளது.

Promotional image from the Arma-3 online game

பட மூலாதாரம், Bohemia Interactive

படக்குறிப்பு,

அர்மா-3 வீடியோ கேம்

வாராந்திர வோஸ்க்ரெஸ்நோயே விரிம்யா நிகழ்ச்சியில் இடம்பெற்ற துப்பாக்கி சுடும் காட்சியின் காணொளி அர்மா -3 போர்தந்திர வீடியா கேமின் ஒளிப்பதிவு என்பதை இந்நிகழ்ச்சியை உற்று கவனித்த பார்வையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி ரஷ்ய படைப்பிரிவுகளில் பணிபுரிவோரை புகழ்ந்து சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.

கடந்த வாரத்தின் 'தந்தையர் நில பாதுகாவலர் தினத்தை' நினைவுகூரும் வகையில், "தங்கள் வாழ்நாளை விட கடமைக்கும், மரியாதைக்கும் மதிப்பளித்தோரை பாராட்டுகின்ற நிகழ்ச்சியாக இது அமைந்தது.

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சிரியாவில் நடைபெற்ற தரைவழித் தாக்குதல் விமானம் எஸ்யு-25யின் விமானி ரோமன் ஃபிலிப்போஃவ் இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.

எஸ்யு-25 பிராக்ஃபுட் விமானங்களின் தாக்குதலை காட்டுகின்ற மிக விரைவாக நகர்வு வரிசையில் இந்த வீடியோ கேமின் காணொளி பதிவு ஒளிப்பரப்பாகியுள்ளது.

பட மூலாதாரம், CHANNEL ONE

படக்குறிப்பு,

போர்க்களம் என்று ஒளிபரப்பு செய்யப்பட்ட

இதனை 'பிகாபு' (Pikabu) சமூக வலையமைப்பு பயன்பாட்டாளர்களால் விரைவாக இனம்கண்டு இது காட்சி வீடியே கேம் காட்சி என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

திட்டமிட்டதா அல்லது தற்செயலானதா?

'பிகாபு' என்பது அமெரிக்காவில் காணப்படும் ரெடிட்டிட் (Reddit) என்கிற சமூக வலையமைப்பிற்கு இணையான ரஷ்யாவின் சமூக செய்தி வலையமைப்பாகும்.

இந்த வீடியோ கேம் காணொளி பதிவு திட்டமிட்டு ஒளிபரப்பப்பட்டதா? அல்லது தற்செயலாக நிகழந்ததா என்று இந்த சமூக வலைதளத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

அர்மா-3 வீடியோ கேமின் காணொளி, இதனை தொகுத்தபோது சேர்க்கப்பட்ட ரகசிய அடையாளம் என்று ஒருவரும், இதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உள்ளனர், உதவி பெறுவதற்காக பிச்சை எடுக்கிறார்கள் என்று சில பயன்பாட்டாளர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ கேமை தெரிந்தவர்கள் கண்டுபிடிப்பதற்காக வேண்டுமென்றே ஒளிபரப்பப்பட்ட ஈஸ்டர் முட்டையா? என்று இன்னொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன காரணம்தான் இந்த ஒளிபரப்புக்கு இருந்தாலும் 'சேனல் ஒன்'னின் தரத்தை குறைக்கின்ற அடையாளமாக இது விளங்குகிறது என்று 'டிஜெர்னல்' வலைப்பூ எழுத்தாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

"40 முதல் 50 வரையான வயதுடையோர் பார்க்கின்ற நிகழ்ச்சி இது. அவர்கள் பெரும்பாலும் அர்மா வீடியோ கேம் பார்த்திருக்கமாட்டார்கள் என்பதால் இந்த வேறுபாட்டை தெரிந்திருக்கமாட்டார்கள்" என்று நிக்கோலாய் ச்சுமாகோஃப் தெரிவித்திருக்கிறார்.

ஒரு மிக பெரிய தவறு

இந்த காணொளி பதிவு தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், CHANNEL ONE

ஆவணக்காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் பதிவு வீடியோ தொகுப்பு பதிப்பாசிரியரால் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று 'சேனல் ஒன்' தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்னால் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோ கேம் பற்றிய செய்தியை தொடர்ந்து, இந்த காணொளி பதிவு ஆவணக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று 'சேனல் ஒன்' செய்தி அலுவலகம் தெரிவித்ததாக 'கோவோரிட் மோஸ்க்வா' வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், செய்தி அறிக்கையில் இடம்பெறும் வாழ்க்கை சம்பவங்களை விவரிப்பதற்காக வீடியோ கேம் காணொளி பதிவை இணைத்திருப்பது ரஷ்ய ஊடகங்களில் இது முதன்முறை நடைபெற்ற சம்பவமல்ல.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், .இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு அமெரிக்கா உதவுகிறது என்பதை காட்டுகின்ற "மறுக்கமுடியாத சான்று" என்று புகைப்படங்களை வெளியிட்டது.

ஆனால், அவை எசி130 கன்ஷிப் சிமுலேட்டர்: ஸ்பெசியல் அப்ஸ்ஸ்குயடிரோன் என்ற திறன்பேசியில் இருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டவை என்பதை இணையதள பயன்பாட்டளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

காணொளிக் குறிப்பு,

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் மீண்டும் தாக்குதல்

2013ம் ஆண்டு வெளியான அர்மா-3 வீடியோ கேமை "ஒரு பெரிய இராணுவ சாண்ட்பாக்ஸில் உண்மையான போர் விளையாட்டு" என்று போஹேமியா இன்டராக்டிவ் வடிவமைப்பாளர்கள் விளக்கியிருந்தனர்.

இந்த வீடியோ கேம் 5 லட்சம் பேர் உலக அளவில் விளையாடி வருவதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2030ஆம் ஆண்டு நடைபெறுவதாக காட்சியமைக்கப்பட்ட இந்த கணினி விளையாட்டு, புனையப்பட்ட மற்றும் உண்மையான "கிழக்குப் படைகள்" எதிராக நேட்டோ படைப்பிரிவுகள் போரிடுவதாக இருக்கிறது. இது இரானில் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :