'சிரியாவில் இன்னும் ஓர் உதவிப் பொருளைக் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை'

சிரியாவில் 30 நாட்கள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு அவை கடந்த சனிக்கிழமையன்று வாக்களித்தபின்னர், போர் நடைபெறும் பகுதிகளில் இன்னும் ஒரு நிவாரணம் மற்றும் உதவிப் பொருளைக்கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை நிரப்பிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பத்து பகுதிகளுக்குள் நுழைய சரக்கு வாகனங்கள் சனிக்கிழமை முதலே காத்திருப்பதாகவும், அப்பகுதிகளில் சண்டை இன்னும் நீடிப்பதால் அவற்றை தேவைப்படுபவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்றும் ஐ.நாவின் அவசரகால உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மார்க் லோகாக் கூறியுள்ளார்.

சிரியாவில் சண்டை நிறுத்தம் எப்போது அமலுக்கு வரும் என்றும் அவர் பாதுகாப்பு அவையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதவிப் பொருட்களை வழங்குவதறகாக தினமும் ஐந்து மணிநேரம் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளலாம் என்று சிரியா அரசுக்கு ஆதரவாக போரிட்டு வரும் ரஷ்யா ஏற்கனவே கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் (கோப்புப் படம்)

ரஷ்யா கூறும் ஐந்து மணிநேர சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கவும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அந்த நேரம் போதாது என்று மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் மீண்டும் தாக்குதல்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்