உலகப்பார்வை: சிரியாவில் தவித்த பாகிஸ்தான் தம்பதியினர் மீட்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியாவில் தவித்த பாகிஸ்தான் தம்பதியினர்

பட மூலாதாரம், EPA

பாகிஸ்தானைச் சேர்ந்த முதிய தம்பதியினர் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

செம்பிறைச் சங்கம் அவர்கள் வெளியேற உதவி செய்துள்ளது.

எஃகு இறக்குமதிக்கு வரி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

’உலகின் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை’

தோற்கடிக்க முடியாத அணு ஆயுதங்களின் வரிசையை ரஷியா உருவாக்கியுள்ளதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP

உருவாக்கப்பட்ட ஆயுதங்தகளில் உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று தாக்கும் ஏவுகணையும் ஒன்று என புதின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

கால்பந்து போட்டியை காண வந்து கைதான பெண்கள்

இரானில் கால்பந்து போட்டியை காண முயன்ற 35 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

அவர்கள் தற்காலிகமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் இரான் தெரிவித்துள்ளது.

நேரலை நிகழ்ச்சி ஒன்றில், இரானிய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கால்பந்து போட்டிகளை காண பெண்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் நேரலை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

மியான்மர் படையை திரும்பப்பெற வங்கதேசம் கோரிக்கை

பட மூலாதாரம், AFP

ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் தங்கியுள்ள, இரு நாட்டிற்கும் பொதுவான எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை திரும்பப் பெறுமாறு வங்கதேசம் மியான்மரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வருடம் மியான்மரில் தங்களின் வீடுகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து 7லட்சம் ரோஹிஞ்சா மக்கள் அந்நாட்டிலிருந்து தப்பித்தனர். அதில் 5000க்கும் அதிகமானோர் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள குறுகிய நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :