ஆஸ்கார் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஹாலிவுட் பிரபலங்கள்

  • 5 மார்ச் 2018
நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்கார்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த இந்திய நடிகர்களான ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி அரங்கத்தில் 90வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களுக்கும், நடிகர்களுக்கும் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.

அதேசமயம், திரைத்துறையை சேர்ந்த உயிரிழந்த முக்கிய பிரபலங்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்.

அவ்வாறான ஒரு நிகழ்வில்தான் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவிக்கும், சசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

துபாயில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்குகள் 28ஆம் தேதியன்று நடைபெற்றன.

இவர்களைதவிர, கடந்த ஆண்டு மரணித்த, சினிமா துறையை சேர்ந்த ரோஜர் மூர், மேரி கோல்ட்பெர்க் மற்றும் ஜோஹன் ஜோஹன்சன், ஜான் ஹேர்ட் மற்றும் சாம் ஷெப்பர்ட் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 89-வது அகடாமி விருதுகள் வழங்கும் விழாவில், பிரபல பாலிவுட் நடிகரான ஓம் புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்