சிரியா போர்: இரு வாரங்களில் 800 பேர் பலி

சிரியா போர்: இரு வாரங்களில் 800 பேர் பலி

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்தும் அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை நெறியற்ற செயல் என்று ஐ.நா. கண்டித்துள்ளது. இதற்கிடையே, சிரியா அரசுப் படையினரால் முற்றுகையிடப்பட்ட கிழக்கு கூட்டாவில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ரஷ்ய படையினரும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்கள். இந்த செய்தியில் நீங்கள் காணும் சில காட்சிகள் உங்கள் மனதுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறோம்.