கர்நாடகா: லோக் ஆயுக்தா நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே கத்திக்குத்து

  • 8 மார்ச் 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

படத்தின் காப்புரிமை Twitter
Image caption விஸ்வநாத் ஷெட்டி

கர்நாடக மாநில ஊழல் வழக்குகள் விசாரணை அமைப்பான லோக் ஆயுதத்தாவின் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை, பல வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தேஜஸ் சர்மா எனும் நபர் நீதிமன்ற வளாகத்திலேயே மூன்று முறை கத்தியால் குத்தினார்.

தேஜஸ் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி விஸ்வநாத் தற்போது ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் மத்திய அரசிடம் இருந்து ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான பணத்தை வழங்க மத்திய அமைச்சரவை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

அந்த நிறுவனங்கள் தற்போது 12 தவணைகளுக்கு பதிலாக, 16 தவணைகளில் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தலாம்.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த ஆண்டு லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உறவினர்களை இழந்தவர்கள்

அமெரிக்காவில் பரவி வரும் துப்பாக்கி கலாசாரம் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

அமெரிக்காவின் உணவுப் பழக்கங்கள், குளிர்பானங்கள் போன்று துப்பாக்கி கலாசாரமும் பிற நாடுகளுக்கு பரவிவிடக் கூடாது என்று அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வரும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 15ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

நிதி அமைச்சராக இதுவரை ஏழு நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்