செல்வந்தர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் சீனப் பெண்கள்

  • 10 மார்ச் 2018

உலகெங்கும் தற்சார்புகொண்ட பெண் பில்லியனர்களின் பட்டியலில் சீனா மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிராமத்தில் வறுமையில் வளர்ந்தவர் ஜுளெ குவென்ஃபெய்

சீனப் பத்திரிகையான ஹூருன் வெளியிட்டுள்ள செல்வந்தர்கள் பட்டியலில் முதல் நான்கு இடத்தை சீனப் பெண்கள் பிடித்துள்ளனர்.

சுயசார்புள்ள பெண் பணக்காரர்களில் 9.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட ஜுளெ குவென்ஃபெய் என்ற சீன பெண், முதல் இடத்தை பிடித்துள்ளார். மடிக்கணினிகள், ஸ்மார்ட் ஃபோன்கள் போன்றவற்றின் வெளிப்புற கண்ணாடி திரையை உருவாக்கும் தொழிலதிபர் ஜுளெ.

இவரது லென்ஸ் டெக்னாலஜி என்ற ஜுளெவின் நிறுவனம், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் இவரின் வாடிக்கையாளர்கள்.

மிகவும் வறிய பின்னணியைச் சேர்ந்த ஜுளெ குவென்ஃபெய், இந்த வாரத் தொடக்கத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பில்லியனர்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப்பெரிய பணக்காரிகளில் 16வது இடத்தை ஜுளெ குவென்ஃபெய் பெற்றிருக்கிறார். பட்டியலில் இவரை விட பணக்காரிகளாக இருக்கும் பெண்கள் பரம்பரையாகவோ அல்லது செல்வந்த கணவர்களால் பணக்கார பட்டியலில் இடம்பெற்றவர்களாக இருப்பவர்கள் என்பதோடு அவர்கள் சுயசார்பாக செல்வம் சம்பாதித்தவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூரனின் சுயசார்புள்ள பணக்கார பெண்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் 28 இடங்களை சீனப் பெண்கள் பிடித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption VietJetஇன் பிரதான நிர்வாகி, குயேன் தி ப்யூங் தோ

பெய்ஜிங்கை சேர்ந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சென் லிக்வா($ 8.1bn) விடம் இருந்து ஜுளெ முதல் இடத்தை பிடித்துள்ளார். ஃபூ வாஹ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்திவரும் சென் 2017ஆம் ஆண்டு முதல் இடத்தில் இருந்தார், அவர் இப்போது மூன்றாவது இடத்திற்கு இறங்கிவிட்டார்.

சீனாவின் மேற்கு நகரமான சோங்சிங்கை சேர்ந்த மற்றொரு ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் வூ யாஜுன், இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வெறும் 12 மாதங்களில் வியப்பூட்டும் விதமாக 83% அளவு வளர்ச்சி கண்டுள்ள அவரின் சொத்து மதிப்பு 9.3 பில்லியன் டாலர்கள்.

சீனாவிற்கு வெளியில் மிகப்பெரிய பணக்கார பெண்மணிகளில் ஒருவரான டயானா ஹென்ட்ரிக்ஸ் ஒரு அமெரிக்கர். விஸ்கான்சை சேர்ந்த ஏபிசி சப்ளை என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் இவர். இந்த நிறுவனம், கூரை மற்றும் ஜன்னல்களை விநியோகிக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்று.

வியட்னாம் விமான நிறுவனம் VietJetஇன் பிரதான நிர்வாகி, குயேன் தி ப்யூங் தோ (Nguyen Thi Phuong Thao), பட்டியலின் மிக உயர்ந்த இடத்தில் புதிய வரவாக நுழைந்திருக்கிறார். ஹுனின் செல்வ மதிப்பு 2.8 பில்லியன் டாலர்கள்.

வளர்ந்து வரும் வாய்ப்புகள்

இந்தியாவும் சீனா போன்ற பெரிய அளவிலான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் சுயசார்புடைய பணக்கார பெண்மணிகளில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய பெண்மணி மட்டுமே உள்ளார். மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனம் பயோகான் உரிமையாளர் கிரன் மஜும்தார்-ஷா தான் அந்த இந்திய பெண்மணி.

கடந்த ஆண்டுகளைவிட பில்லியனர்களின் பட்டியலில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்க முன்னேற்றம் ஆகும்.

உதாரணமாக, ஜூளெவின் செல்வம் 2017 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 45% அதிகமாகியிருக்கிறது. ஹாங்காங் மருந்துகள் நிர்வாகியான செங் ஜியாலிங்கின் செல்வமும் இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“பெண்கள் தங்களை நிரூபிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார்கள்” - கௌரி ஷிண்டே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: