டிரம்ப்-கிம் சந்திப்பு: அமெரிக்காவிலிருந்து வரும் முரண்பட்ட தகவல்கள்

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையிலான சந்திப்பு குறித்த முரண்பட்ட தகவல்கள் வெள்ளை மாளிகையிலிருந்து வந்தவண்ணம் உள்ளன.

வட கொரியாவுடனான ஒரு ஒப்பந்தம் செயல்பாட்டு நிலையில் உள்ளதாகவும், அது நிறைவேற்றப்பட்டால் உலகத்துக்கே நல்லது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு முன்னர் பேசிய டிரம்ப்பின் செய்தித்தொடர்பாளரான சாரா ஹுக்காபே, வட கொரியா உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதை அமெரிக்கா கண்டால்தான் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறியிருந்தார்.

மிகவும் சிக்கலான விவகாரம் தொடர்பாக நடக்கவுள்ள மேல்மட்ட சந்திப்பது குறித்து டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள திடீர் முடிவை அடுத்து அவருடைய ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் அவசரகதியில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள்.

இந்த முரண்பட்டத் தகவல்கள் குறித்து வட கொரியா கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: