உலகப் பார்வை: ஆப்கானிஸ்தான் தாலிபன் தாக்குதலில் 24 காவல் படையினர் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

தாலிபன் தாக்குதலில் 24 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA
Image caption தாலிபன் தாக்குதல் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளது

ஆப்கானிஸ்தானில் ஃபாரா மாகாணத்தில் தீவிரவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியிருந்த அந்நாட்டு காவல் படைகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, தாலிபன் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

இரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த மாகாணம் கஞ்சா பயிரிடப்படும் பகுதிகளில் முக்கிய மையமாக விளங்குகிறது.

200 கி.மீ நீளமுள்ள கொடி

படத்தின் காப்புரிமை AFP/Bolivian presidency
Image caption பொலிவியா

சிலியுடன் 19ஆம் நூற்றாண்டில் நடந்த போரின்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளை இழந்த பொலிவியா, கடல் எல்லை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், 200 கி.மீ நீளமுள்ள கொடி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொலிவியாவின் தேசிய சின்னங்கள் வரையப்பட்டுள்ள அக்கொடி, 'கடல்பகுதியில் தங்களுக்கான உரிமை இருப்பதை நிரூபணம் செய்வதானது' என்று பொலிவியா அதிபர் எவோ மொரேல்ஸ் கூறியுள்ளார்.

தொடரும் வர்த்தகப் போட்டி

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகரித்துள்ள நிலையில், அந்த வரியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு வரிவிலக்கு பெறுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

டிரம்ப் அறிவிப்புக்கு எதிர் நடவடிக்கையாக, அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி உயர்த்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: